புதுக் கவிதை


சிந்திக்க சிலநொடிகள்

ஊனம் இல்லாமலே
பிச்சை எடுப்பவர்களுக்கும்,
மற்றவரை பார்த்து
பரிகாசம் பேசுவோர்க்கும்
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

கொலை செய்து வாழ்பவர்களுக்கும்
கொள்ளை அடித்து வாழ்பவர்களுக்கும்
கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும்
மதவெறிகொண்ட மதவாதிகளுக்கும்
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

பல ஆயிரம் தலைமுறைகளாக
அரும்பாடுபட்டு உருவாக்கித்தந்த
பண்பாட்டையும், கலாசாரத்தையும்
நாகரீகம் என்ற மோகத்தால்
ஒரே ஒரு நுற்றாண்டில்
மின்னலைவிட வேகமாக அழித்துவிட்டோமே
நமக்கெல்லாம் தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

பேரும், புகழும் கிடைக்குமென்றால்
எதை வேண்டுமானாலும்
விட்டுக்கொடுக்கிறார்கள்,
பணம் கிடைக்குமென்றால்
அந்த பேரையும், புகழையும்
விட்டுக்கொடுக்கும் மனிதர்களுக்கு
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

பிறகு
எப்படி உருப்படும் இந்த உலகம்!


அறியாமை! 

கற்காலத்தில்,
கல்லை உடைத்தான்! மனிதன்
பிற்காலத்தில்,
நெல்லை உடைத்தான்!
தற்காலத்தில்,
அணுவை உடைக்கிறான்!
அணு உலையில் வைத்து,

அணுவை உடைக்க தெரிந்த
ஆரறிவுப் படைத்த,
அவனுக்கு - ஆழ்ந்த நம்பிக்கையாம்!
ஆருடத்தின்மேல்!
அறியாமை! இதுவிடியல்

இசையின் குருகள் ஆன குயில்கள்
இன்னிசை கச்சேரி நிகழ்த்த
ஓங்கி வளர்ந்து ஒய்யாரமாய் நிற்கும் மரங்கள்
தன் ஆயிரம் கைகளை அழகாய் வீச
பனியிடம் குளிரையும் பூவிடம் மணத்தையும்
கடனாய் வாங்கி
புயல் எனும் கோபத்தை தவிர்த்து
காற்று தென்றலாய் வீச
காலை கதிரவன் தன் கதிரை
கைகளாக விரிக்க
புற்கள் தன் மீது படர்ந்த பனித்துளிகளை
சிறு புதையல் என மறைக்க
அழகின் சிகரமாக மாறப்போகிறோம்
என கர்வம் கொண்ட மொட்டுகள்
பூவாய் மலர
வெள்ளை நரை தலையை கொண்ட ஓடைகள்
புது மெட்டுகளுடன் ஒலியை எழுப்ப
அழகின் வண்ணமாம் கருமை நிறத்தை
தனக்கே உரியதாய் கொண்ட காகம்
தன் இனிய குரலில் சங்கீதம் பாட
வட்ட கிண்ணத்தில் பதித்த முத்துக்கள் போல
மின்னும் அழகியான நிலவு
தன் காதலன் வருகைக்காக காத்திருக்க
அம்மாவின் நெற்றி பொட்டைப் போல
தன் முகத்தை சாந்தமாய் கொண்டு
தன் காதலி நிலவை சூரியன் பார்க்க
என் மகன் வந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில்
கீழ்வானம் அழகாய் சிவக்க
இதோ விடிகிறது விடியல்அழகான மழைத்துளியே!

நீ ஆகாயத்தில் பிறக்கிறாய்
பூமியில் சிலிர்க்கிறாய்
வானவில்லை தோன்ற வைக்கிறாய்
தொன்றுதொட்டு எங்களை நேசிக்கிறாய்

நீ குறைவாசியாக இருந்தால்
ஏன் ஏழை விலைவாசியில் தவிக்கிறான்

தொலை தூரத்தில் இருந்தாலும்
என் மனம் துரத்த வைக்கும்
அழகான மழைத்துளியே!கல்வி 

கேடில் விழுச்செல்வமாம் கல்வி
நாட்டில் அனைவருக்கும் கிடைகிறதா
நாடும் வசதிக்கு ஏற்ப நால்வகை கட்டணங்கள்...
வாடும் ஏழைக்கொரு வசதியும் இங்கில்லை...

தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப
அரசுப் பள்ளிகளும் ஆகிடுமா?
காசற்ற ஏழைக்கு கல்வியில்லை என்றானால்
மாசற்ற சமுதாயம் சாத்தியமா?!...

இன்றைய தேவை....

வாழும் வழிகாட்டும் வாழ்க்கை கல்வி...
ஏழை எளியோருக்கும் உயர்தர கல்வி...

காளிதாசனுக்கு கலைமகள் அருளியது....
காசுபடைத்தோரின் கருவியாய் போனது....

காசில்லா ஏழை என்ன செய்வான்.....

சோறூட்டும் போது அன்னை சொன்னது கொஞ்சம்....
செந்தமிழை சேறாக்கும் சென்னையில் கொஞ்சம்...
அவலங்களை தாண்டி அரசிடம் கொஞ்சம்...
இலவசமாய் பெற்றிங்கே ஏழையும் கற்றான்....

என்மொழியில் நான் கற்க கட்டணமா....?!- இந்நிலையை
செம்மொழி மாநாடு மாற்றிடுமா....?!
கட்டணங்கள் இனி கழிப்பிடத்தோடு போகட்டும்.....
கல்விக்கும் ஏனோ....?!